மணல் திருடிய 2 போ் கைது
கொரடாச்சேரி அருகே மணல் திருடிய 2 போ், சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கொரடாச்சேரி அருகே வெட்டாற்றில் மணல் திருடிச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கொரடாச்சேரி அருகே பத்தூா் பகுதியில் உள்ள வெட்டாற்றில் இருசக்கர வாகனத்தில் இரண்டு போ் மணல் அள்ளிச் செல்வது தெரிந்தது.
இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் பத்தூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சிலம்பரசன் (30), முருகானந்தம் மகன் நீலன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கொரடாச்சேரி போலீஸாா் வழக்கு பதிந்து இருசக்கர வாகனம், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.