கரூர்: ``தவெக பேரணி உயிரிழப்புகளுக்கு திமுக தான் காரணம்'' - அண்ணாமலை கூறுவது என்...
கரூர் கூட்ட நெரிசல்: `வரும் செய்திகள் கவலையளிக்கின்றன; உடனடி சிகிச்சைகளை' - முதல்வர் ஸ்டாலின்
கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், பலர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று விஜய், நாமக்கல் பிரசாரத்திற்கு தாமதமாகத்தான் வந்தார். அவசர அவசரமாக, அதை முடித்துவிட்டு உடனே, கரூர் மாவட்டத்திற்கு விரைந்தார். ஆனால், நாமக்கல் - கரூர் சாலையில் போக்குவரத்து நெரிசலும், கூட்ட நெரிசலும் திரண்டு தடைமேல் தடைபோட மிகவும் தாமதமாகத்தான் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார் விஜய். வழி எங்கும் கூட்ட நெரிசல் இருந்ததால் காவல்துறையினரும் விஜய்க்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்த, விஜய் காவல்துறைக்கு சிறப்பான நன்றியை தெரிவித்திவிட்டு பேச்சைத் தொடங்கினார். ஆனால், வரிசையாக ஆம்புலன்ஸ்கள் கூட்டத்தின் நடுவே வர, பேச்சை நிறுத்திவிட்டு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

இதையடுத்து பேசிக்கொண்டே இருக்கும்போது விஜய்யின் வாகனத்தின் அருகே தொண்டர்கள் மூச்சுத் திணறலால் மயங்கி விழ, விஜய்யே பேச்சை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, ஆம்புலன்ஸையும் அழைத்து உதவினார். மக்கள் கூட்ட நெரிசலில் தவிக்க, தாமதமாக வந்த விஜய் நேரமில்லாமல் விரைந்து பேச்சை முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், அதில் குழந்தைகளும் பலியாகியிருப்பதாகவும் அதிர்ச்சியாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர். மேலும் பலரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 27, 2025
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட…
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ், அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்."என்று பதிவிட்டிருக்கிறார்.