கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு
கேரளத்தில் நடுக்கடலில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், கொச்சியில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த படகு மீது கப்பல் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இதில் படகும் மீன்பிடி வலையும் சேதமடைந்தன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடற்கரையிலிருந்து சுமார் எட்டு கடல் மைல் தொலைவில் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. கப்பல் மோதியதால் அவர்களின் படகும் மீன்பிடி வலையும் சேதமடைந்தன.
தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்
சம்பவம் நடந்தபோது படகில் 49 மீனவர்கள் இருந்தனர். அவர்களில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. புகார்தாரர்கள் வியாழக்கிழமை காலை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சேதத்தை மதிப்பிட படகு மற்றும் மீன்பிடி வலை ஆய்வு செய்யப்படும்.
அதன் பிறகே அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மீனவர்கள் கரையை அடைந்த பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.