செய்திகள் :

"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்” - சீமான் பேட்டி

post image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின் மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்துவதற்காக இடத்தைப் பார்வையிட்டார். இதற்காக படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்று ஆய்வும் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் - நடிகர் விஜய்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் சம்பவம் குறித்து பேசிய சீமான், "அரசியல் கட்சி பிரசாரங்கள், மாநாடுகள் நடத்துவதை இன்னும் கொஞ்சம் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கு. தனியாக இடத்தைப் பிடித்து கூட்டம் நடத்தலாம். மக்கள் இருக்கும் தெருக்களில், சாலைகளில் பிரசாரங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

இல்லையென்றால் வெளிநாடுகளில் இருப்பதுபோல எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, மீடியா மூலம் பேசி மக்களிடம் பரப்புரை செய்யலாம். இப்போது இருக்கும் நடைமுறையால் நேரம், பணம் விரையமாகிறது, மக்களுக்கும் இடையூறாகவும் இருக்கிறது.

சீமான்

கரூர் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய வந்த பாஜக எம்.பி குழு விஜய்க்கு ஆதரவாகவே நிலைபாடு எடுக்கிறது. பாஜக விஜய்யை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது.

கூட்ட நெரிசல் அசாம்பாவிதத்தில் விஜய் மீதும் தவறு இருக்கிறது, அரசின் மீதும் தவறு இருக்கிறது. விஜய் தன்மீது எந்தத் தவறும் இல்லை என்று பொறுப்பில்லாமல் பேசுவது தவறு. ஒருவரை ஒருவர் மாறி மாறி பழிபோட்டு அரசியல் செய்வது சரியல்ல" என்று பேசியிருக்கிறார் சிமான்.

"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" - டிடிவி தினகரன்

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அற... மேலும் பார்க்க

"மணிப்பூர் வேறு கரூர் வேறு; விஜய் மன்னிப்புக் கேட்ட பிறகும் பிரச்னை ஏன்?" - குஷ்பு பேட்டி

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அ... மேலும் பார்க்க

ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியில் தனி கவனம் தேவை; கேரள அரசின் முன்னெடுப்பு !

கேரள அரசு, அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை, கல்வி விவரங்கள், புகார்களை பதிவு செய்ய 'Sampoorna Plus' எனும் செயலியை செயல்படுத்தி வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பே கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்... மேலும் பார்க்க

'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப்படைத் தளபதி பதில்

சமீபத்தில் ஸ்டார்லிங்க், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், வான்வெளி ராணுவத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.மேலும், ராணுவ பைலட்டுகள் ஓட்டும் போர் விமானத்தை விடவும... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் தொடக்கக் கால கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டு வந்தது.மீண்டும் இப்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு நிரந்தர DGP நியமனம் எப்போது? தொடரும் இழுபறி; UPSC கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்காகக் கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க ஆட்சிக்கு வேண்டப்பட்ட ச... மேலும் பார்க்க