செய்திகள் :

'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப்படைத் தளபதி பதில்

post image

சமீபத்தில் ஸ்டார்லிங்க், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், வான்வெளி ராணுவத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.

மேலும், ராணுவ பைலட்டுகள் ஓட்டும் போர் விமானத்தை விடவும், ட்ரோன்கள் சிறப்பாகச் செயல்படும், அதுதான் விமானப் படையின் எதிர்காலம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் 93வது விமானப் படை நாள் கொண்டாட்ட விழாவில் விமானப்படை, எதிர்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.

அப்போது எலானின் கருத்து குறித்துப் பேசியிருந்த இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், "மனிதர்கள் ஓட்டும் போர் விமானங்கள் தவறாக இதுவரை யாரையும் தாக்கியதில்லை, தவறி கீழே விழுந்ததில்லை.

திறமைமிக்க ராணுவ பைலட்களால் திறம்படச் செயல்பட்டு வருகிறது. அதனால் ட்ரோன்களைவிடவும், மனிதர்கள் ஓட்டும் போர் விமானங்கள் துல்லியமான திறன்மிக்கவை.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அவர் (எலான்) ஒரு பிஸ்னஸ்மேன், அதனால் அப்படிப் பேசுகிறார். அவரது கார்கள் ரோட்டில் எப்படி ஓடுகிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். அது ஒரு சாதாரண கார் என்பதால் அதில் கோளாறு ஏற்படுவது என்பது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், நாட்டின் போர் விமானங்கள் அப்படியில்லை.

நாட்டின் பாதுகாப்பில் சமரசங்கள் செய்துகொள்ள முடியாது. மனிதர்கள் இல்லாமல் எதையும் இயக்க முடியாது. அதனால் ட்ரோன்கள்தான் விமானப்படையின் எதிர்காலம் என்பது தவறான கருத்து.

Air Chief Marshal Amar
ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங்

புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. அதையெல்லாம் எப்படி நாட்டின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தலாம் என்று எங்களின் R&D குழு ஆராய்ச்சிகள் செய்துவருகிறது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விமானப்படையை இன்னும் அதிநவீனமாக மேம்படுத்துவோம்" என்று பேசியிருக்கிறார்.

மயிலாடுதுறை: "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் தொடக்கக் கால கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டு வந்தது.மீண்டும் இப்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு நிரந்தர DGP நியமனம் எப்போது? தொடரும் இழுபறி; UPSC கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்காகக் கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க ஆட்சிக்கு வேண்டப்பட்ட ச... மேலும் பார்க்க

ம.பி: `3-வது குழந்தையை காட்டில் வீசிய தம்பதி' - பகீர் பின்னணி; கேள்விக் குறியாகும் அரசின் சட்டம்

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றச் சட்டம் இருக்கிறது. 2000-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் விதிமுறைகள் MP Civil Services Rules, 196... மேலும் பார்க்க

ஆதார் கட்டணங்கள் உயர்வு; எந்தெந்த மாற்றங்களுக்கு எவ்வளவு கட்டணம்? - முழுப் பட்டியல்

ஆதார் அட்டை வாங்கும்போது இருந்த அதே முகவரியிலேயே, நாம் இப்போது இருக்க மாட்டோம், அல்லது நமது ஆதார் அட்டையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கலாம்.இவைகளை UIDAI வலைதளத்திலேயோ அல்லது உதவி மையங்களுக்கோ சென்று சரி ... மேலும் பார்க்க

``முதல் சாட்சி விஜய்தான், நீதி கிடைக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும்'' - பாஜக

விஜய்யின் கரூர் பிரசாரம்கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கார் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி, 32 பேர் படுகாயம்; பின்னணி என்ன?

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் (Frontier Corps - FC) தலைமையகம் அருகே இன்று (செப் 30) கோர கார் வெடிகுண்டு விபத்து நடந்திருக்கிறது.காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வைத்து வெட... மேலும் பார்க்க