ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
ம.பி: `3-வது குழந்தையை காட்டில் வீசிய தம்பதி' - பகீர் பின்னணி; கேள்விக் குறியாகும் அரசின் சட்டம்
மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றச் சட்டம் இருக்கிறது.
2000-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் விதிமுறைகள் MP Civil Services Rules, 1961 - ல் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி ஜனவரி 26, 2001க்குப் பிறகு மூன்றாவது குழந்தையைப் பெறும் எந்தவொரு அரசு ஊழியரும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவர் ஆகிறார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பப்லு தண்டோலி (38). இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவது குழந்தையை கருத்தரித்தால் பப்லுவின் மனைவி ராஜ்குமாரி.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ராஜ்குமாரி பெண் குழந்தையைப் பிரசவித்தார்.
குழந்தை பிறந்த அதே இரவு, தம்பதி மோட்டார் சைக்கிளில் குழந்தையைத் தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் குழந்தையைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
அன்று இரவு மழை பெய்ததால் குழந்தையின் முகம் பூமிக்கு மேலே வந்திருக்கிறது. இரவு முழுவதும் பூச்சிக் கடியிலும், மழையிலும் இருந்த குழந்தை மறுநாள் காலை அந்தப் பகுதி கிராமவாசிகளின் கண்ணில் சிக்கியிருக்கிறது.

அரசு வேலை பறிக்கப்படும் என்ற அச்சம்
உடனே காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டு, மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் காவல்துறை விசாரணையில், குழந்தையின் பெற்றோர் கைது செய்தப்பட்டிருக்கின்றனர். அரசு வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளன. இதுபோன்ற துயரங்களைத் தடுக்க விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.