கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
Bigg Boss 9: "வாய்ஸ் ரைஸ் பண்ணாதீங்க; நான் கெட்டவனாவே இருக்கேன் "- கெமி, கம்ருத்தின் வாக்குவாதம்!
பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (அக்.6) வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் கெமி, கம்ருத்தினிற்கும் வாக்குவாதம் நடக்கிறது.

'பேசுறப்போ பேசுங்க. நடந்து போகாதீங்க, அது நல்லது கிடையாது' என்று கெமி சொல்ல 'நான் பேசவே கூடாதா? வாய்ஸ் ரைஸ் பண்ணாதீங்க. நீங்க வாய்ஸ் ரைஸ் பண்ணா நானும்தான் பண்ணுவேன்.
உங்களுக்கு என்ன பிரச்னை' என்று கம்ருத்தினும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
நம்ம நல்லது பண்ணா நல்லவன். ஒரு கெட்டது பண்ணா நம்ம முழுசா கெட்டவன். நான் கெட்டவனாவே இருந்திட்டு போறேன்' என்று கம்ருத்தின் சபரியிடம் சொல்கிறார்.
கெமிக்கும், கம்ருத்தினிற்கும் என்ன வாக்குவாதம் என்று பொறுத்திருந்து இன்றைய எபிசோடில் பார்ப்போம்.