செய்திகள் :

சீனா: திருமணத்திற்கு வந்த தோழிகளை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நபர்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் தோழிகளை முன் பின் தெரியாத நபர்கள் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற கொடூர செயல்கள், திருமணக் குறும்பு என்ற பெயரில் அரங்கேற்றப்படுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் நண்பர்கள் சிலர் மணப்பெண்ணின் இரண்டு தோழிகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளனர்.

china wedding
china wedding

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. வைரலான வீடியோவின் படி, அந்த இரண்டு பெண்களும் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டுள்ளனர். இந்தச் செயலைச் செய்த மணமகனின் நண்பர்கள் அந்த மணப்பெண் தோழிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், சீனாவின் சில கிராமங்களில் திருமணத்தின்போது இது போன்ற ஹன் நாவோ என்ற பெயரில் கேளிக்கைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் சில சீன கிராமப்புறப் பகுதிகளில் பிரபலமான "ஹுன் நாவோ" என்ற திருமண குறும்பு, பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

``முதலில் மோசடி கால் என நினைத்தேன், ஆனால்" - லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக வந்த ஃபோன் காலை முதலில் மோசடி அழைப்பு என நினைத்து புறக்கணித்திருக்கிறார். அதன் பின்னர் உண்மை என அறிந்ததும... மேலும் பார்க்க

Laurence Watkins: 2,253 வார்த்தைகளைக் கொண்ட பெயரால் உலக சாதனை படைத்த நபர்; பின்னணி என்ன?

நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்தியாவை என்று எடுத்துக்கொண்டால் தந்தையின் பெயருடன், குழந... மேலும் பார்க்க

``நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும், ஆனா இந்த ஷோல'' - ட்ரோல் செய்யப்பட்ட கனிக்கு பிக்பாஸ் அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் நபர்களை இறக்கியுள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வ... மேலும் பார்க்க

`மனைவிக்கு பதில் மாடு!'- காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் - இந்தோனேஷியாவில் நடந்த வினோத சம்பவம்

இந்தோனேசியாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை அவரது காதலனிடம் ஒரு மாடு சில பாத்திரங்கள் மற்றும் பணத்திற்கு ஒப்படைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் மானத்தை காக்கவே இந்த முடிவை எடுத்ததாக கணவர் ச... மேலும் பார்க்க

உலகின் 8வது உயரமான சிகரத்தில் கால் வைத்த இந்தியர்; கின்னஸ் உலக சாதனை படைப்பாரா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபம் சாட்டர்ஜி என்ற இளம் மலையேற்ற வீரர், உலகின் 8வது உயரமான சிகரமான மனாஸ்லுவை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்ப... மேலும் பார்க்க

கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்

கேரளாவில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் முதல் பரிசாகக் கிடைத்துள்ளது. லாட்டரி விழுந்த பிறகும், அவர் தனது வேலையை விட மனமில்லாமல் மறுநாளே பணிக்குத் திரும்பியது அன... மேலும் பார்க்க