செய்திகள் :

`மனைவிக்கு பதில் மாடு!'- காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் - இந்தோனேஷியாவில் நடந்த வினோத சம்பவம்

post image

இந்தோனேசியாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை அவரது காதலனிடம் ஒரு மாடு சில பாத்திரங்கள் மற்றும் பணத்திற்கு ஒப்படைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் மானத்தை காக்கவே இந்த முடிவை எடுத்ததாக கணவர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பழங்குடியின பாரம்பரிய சடங்கான ”மோமோ சரபு” என்ற வழக்கத்தின் கீழ் இந்த பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த தம்பதியருக்கு திருமணம் ஆன சில மாதங்களிலேயே மனைவி வேறு ஒருவருடன் பழகியது கணவருக்கு தெரியவந்துள்ளது. மனைவியின் காதலரே கணவனை அணுகி மனைவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார்.

இதை ஏற்றுக் கொண்ட கணவர் வன்முறையை தவிர்த்து அமைதியான முறையில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண விரும்பியுள்ளார். இரு குடும்பங்களின் கௌரவத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, உள்ளூர் பழங்குடியின பாரம்பரிய படி, மனைவிக்கு பதில் மாடு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியத்தின் படி, திருமண உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை வன்முறை இன்றி தீர்க்கவே இது போன்ற சடங்கு பின்பற்றப்படுகிறது.

இதன்படி மனைவியைப் பெற்றுக் கொள்ளும் ஆண், அவருக்கு ஈடாக கால்நடைகள், வீட்டு உபயோக பொருட்கள் அல்லது பணத்தை வழங்க வேண்டும்.

அந்த பெண்ணை ஒப்படைப்பதற்கு காதலர் ஒரு பசுமாடு, ஒரு ஸ்டீல் கட்டில், இந்தோனேஷியன் ருபியா ஆகியவற்றை வழங்கி இருக்கிறார். இந்த சடங்கு தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி இணையவாசிகள் இடையே கவனம் பெற்று வருகிறது.

``நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும், ஆனா இந்த ஷோல'' - ட்ரோல் செய்யப்பட்ட கனிக்கு பிக்பாஸ் அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் நபர்களை இறக்கியுள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வ... மேலும் பார்க்க

உலகின் 8வது உயரமான சிகரத்தில் கால் வைத்த இந்தியர்; கின்னஸ் உலக சாதனை படைப்பாரா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபம் சாட்டர்ஜி என்ற இளம் மலையேற்ற வீரர், உலகின் 8வது உயரமான சிகரமான மனாஸ்லுவை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்ப... மேலும் பார்க்க

கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்

கேரளாவில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் முதல் பரிசாகக் கிடைத்துள்ளது. லாட்டரி விழுந்த பிறகும், அவர் தனது வேலையை விட மனமில்லாமல் மறுநாளே பணிக்குத் திரும்பியது அன... மேலும் பார்க்க

மலை குன்றை உடைத்து, ஆற்றை திசை திருப்பி.! - ரூ.19,000 கோடியில் கட்டப்பட்ட நவிமும்பை விமான நிலையம்

நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மும்பையில் ஏற்கனவே இருக்கும் ஒரு விமான நிலையம் பயணிகள் நெருக்கடியால் விழிபிதுங்கியபடி இருக்கிறது. இதையடுத்து விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மும்பைக... மேலும் பார்க்க

`முதுகுவலியை குணப்படுத்த' - 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; அடுத்து நடந்தது என்ன?

சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமைய... மேலும் பார்க்க