செய்திகள் :

``நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும், ஆனா இந்த ஷோல'' - ட்ரோல் செய்யப்பட்ட கனிக்கு பிக்பாஸ் அட்வைஸ்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் நபர்களை இறக்கியுள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சீசனில் குக் வித் கோமாளி பிரபலம் கனி திரு கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருக்கு காரக்குழம்பு கனி என்று இன்னொரு பெயரும் உண்டு.

Bigg Boss advice to Kani thiru

இவர் குக் வித் கோமாளியில் காரக்குழம்பு வைத்து பிரபலமானது தான் இந்தப் பெயருக்குக் காரணம்.

தற்போது பிக் பாஸ் சீசனிலும் வந்து சமையல் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்துக் கொண்டிருந்த கனியை சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்தனர்.

“வந்த வேலையை மறந்துவிட்டு சமையலிலேயே மூழ்கிவிட்டார்” என்று ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் கனியை அழைத்து அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதாவது, "உங்களை இங்க நிறைய இடங்களில் பார்க்கவே முடியலையே என்ன ஆச்சு" என்று பிக் பாஸ் கேட்க, அதற்கு கனி சமையல் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று பதில் அளித்தார். உடனே பிக்பாஸ், "நீங்க நல்லா சமைப்பீங்கனு எல்லாருக்கும் தெரியும்.

அதுக்கு பாராட்டுகளும் கிடைச்சுது. இந்த நிகழ்ச்சி நீங்க யாரு, எப்படிப்பட்டவர் என்பதைக் கடந்து, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டத்தான். சமையலைக் கடந்து நிறைய இருக்கு. அந்த திறமைகளை வெளியே காட்டுங்க" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இந்த வீடியோ கிளிப் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

`மனைவிக்கு பதில் மாடு!'- காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் - இந்தோனேஷியாவில் நடந்த வினோத சம்பவம்

இந்தோனேசியாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை அவரது காதலனிடம் ஒரு மாடு சில பாத்திரங்கள் மற்றும் பணத்திற்கு ஒப்படைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் மானத்தை காக்கவே இந்த முடிவை எடுத்ததாக கணவர் ச... மேலும் பார்க்க

உலகின் 8வது உயரமான சிகரத்தில் கால் வைத்த இந்தியர்; கின்னஸ் உலக சாதனை படைப்பாரா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபம் சாட்டர்ஜி என்ற இளம் மலையேற்ற வீரர், உலகின் 8வது உயரமான சிகரமான மனாஸ்லுவை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்ப... மேலும் பார்க்க

கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்

கேரளாவில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் முதல் பரிசாகக் கிடைத்துள்ளது. லாட்டரி விழுந்த பிறகும், அவர் தனது வேலையை விட மனமில்லாமல் மறுநாளே பணிக்குத் திரும்பியது அன... மேலும் பார்க்க

மலை குன்றை உடைத்து, ஆற்றை திசை திருப்பி.! - ரூ.19,000 கோடியில் கட்டப்பட்ட நவிமும்பை விமான நிலையம்

நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மும்பையில் ஏற்கனவே இருக்கும் ஒரு விமான நிலையம் பயணிகள் நெருக்கடியால் விழிபிதுங்கியபடி இருக்கிறது. இதையடுத்து விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மும்பைக... மேலும் பார்க்க

`முதுகுவலியை குணப்படுத்த' - 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; அடுத்து நடந்தது என்ன?

சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமைய... மேலும் பார்க்க