செய்திகள் :

Nobel: ட்ரம்பிற்கு இல்லை; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு; யார் இவர்?

post image

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள். 94 பேர் நிறுவனங்கள். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad). இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.

அமைதிக்கான நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசு

1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர இவர் முக்கிய காரணம்.

ஜனநாயகப் போராட்டங்களின் போது, இவர் பல நாள்கள் மறைந்து வாழ்வதாக இருந்தது. இவரது உயிருக்கு மிகுந்த ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார்.

இவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, போராட்டத்தை அமைதி முறையில் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார்.

இவருக்கு இந்தப் பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

ட்ரம்பிற்கு ஏன் நோபல் அமைதி பரிசு கிடைக்கவில்லை?

இந்தப் பரிசுக்கான பரிந்துரைகள் ஜனவரி 31-ம் தேதிக்குள் சென்றிருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் எந்தெந்தப் போரை நிறுத்தியதாகக் கூறுகிறாரோ, அவைப் பெரும்பாலும் நடந்தது ஜனவரிக்குப் பிறகே.

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் ... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க

Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் மு... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?

'எனக்கில்ல... எனக்கில்ல...' - இது திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் பிரபல வசனம். இது தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தான் சரியாக பொருந்தும். கிட்டத்தட்ட 9 மாதங்களாக, ஆசை ஆசையாய் அவர் எதிர்பார... மேலும் பார்க்க

``அது தற்செயல் அல்ல, திட்டமிட்டசதி'' - வாகனம் மோதிய விவகாரம் குறித்து திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து அக்டோபர் 07 அன்று ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது. அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடி... மேலும் பார்க்க