சரியாக நள்ளிரவு 11.59க்கு கிடைத்த புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்! - 70களில் நடந்த ...
"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் 6) அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.
2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட ராமதாஸ், ஆஞ்சியோ பரிசோதனை முடித்துக் கொண்டு அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார்.

இதற்கிடையில், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட அன்றே அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு நேரில் சென்றார் அன்புமணி.
பின்னர், அவர் ஐ.சி.யு-வில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை என்று அன்புமணி கூறினார்.
அதேசமயம், முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில், ராமதாஸை வைத்து நாடகம் நடத்துகிறீர்களா என்றும், அவருக்கு ஏதாவது ஆனால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி கூறியிருக்கிறார்.
சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அன்புமணி, "அய்யா உடல்நலத்துடன் நல்லா இருக்காரு.
செக்கப் பண்ணதான் மருத்துவமனைக்கு போனாரு. செக்கப் போனதுல சில பேர், `அய்யாவுக்கு உடம்பு சரியில்ல வந்து பாருங்க பாருங்க' இன்றாங்க.

இதெல்லாம் அசிங்கமா இருக்கு. யார் யாரோ உள்ள போயிட்டு பார்த்துட்டு வராங்க.
இதென்ன கண்காட்சியா... அவர தூங்கவிடமாட்றாங்க. அவருக்கு ஏதாவது ஆச்சு தொலச்சு போட்ருவேன். அவரை வச்சிக்கிட்டு நாடகம் பண்றீங்களா..." என்று கோபமாகப் பேசினார்.