செய்திகள் :

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மரியா கொரினா மச்சாடோ' - தலைமறைவாக இருப்பது ஏன்?

post image

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ.

மக்களாட்சிப் போராளியான இவர், பல ஆண்டுகளாக வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மதுரோவின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார், அச்சுறுத்தல்கள், கைதுகள் மற்றும் அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளார். ஆனாலும் ஆயுதமில்லாமலே தங்கள் போராட்டம் தொடரும் என்றும் துணிச்சலையும் உண்மையையும் மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

Maria Corina Machodo

லத்தீன் அமெரிக்காவில் மக்களின் துணிச்சல் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக உருவாகியிருக்கிறார். அரசுக்கு எதிராக அமைதியான வழியில் பல போராட்டங்களை நடத்தியிருக்கும் இவர், வெனிசுலாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் பங்கேற்பதிலிருந்து தடை செய்யப்பட்டதுடன் அரசால் தேடப்பட்டும் வருகிறார்.

வெனிசுலாவின் அரசியல் சூழல்

கடந்த 1992ம் ஆண்டு வெனிசுலாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட Bolivarian Revolutionary Movement – 200 இயக்கத்தின் தலைவர் ஹூகோ சாவேஸ், கைது செய்யப்பட்டு, பின்னர் 1994ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டர்.

பிறகு அவர் ஆரம்பித்த Fifth Republic Movement (MVR) என்ற அரசியல் கட்சி, 1998 தேர்தலில் வெற்றிபெற்றது. சோசலிச கொள்கைகளின்படி ஆட்சி செய்த அவர், பொலிவேரியன் அரசியலமைப்பை உருவாக்கினார். வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

2007ம் ஆண்டு நாட்டின் அனைத்து இடதுசாரி கட்சிகளையும் இணைத்து PSUV கட்சியை உருவாக்கினார்.

PSUV

அவரது பிற்கால ஆட்சியில் அதிகாரத்தை குவித்தல், ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல், எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குதல் ஆகிய விமர்சனங்கள் அவர் மீது எழுந்தன. உதாரணமாக அரசின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக சட்டங்களை மீறியதாகக் கூறி RCTV தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்தது.

பல ஊடகங்கள் அரசினால் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு நபர் இரண்டு ஆட்சிக்காலம் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற வரம்பை நீக்கி, அவரது மரணம் வரை ஜனாதிபதியாக இருந்தார்.

2013ம் சாவேஸுக்குப் பிறகு அவரது அரசில் முக்கிய பொறுப்பு வகித்த 'நிக்கோலஸ் மதுரோ' PSUV கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் இன்றைய வெனிசுலா ஜனாதிபதி.

நிக்கோலஸ் மாதுரோவின் ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என அமெரிக்கா விமர்சித்துள்ளது. அவர் ஆட்சிக்கு வந்ததுமே எண்ணெய் விலை கவிழ்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து சாவேஸின் அடக்குமுறைகள் அதிவேகத்தில் தொடர்ந்தன. சோசலிசத்தின் பெயரில் PSUV ஊழல் மண்டிய கட்சியாக மாறியது.

Nicholas Maduro

வெனிசுலாவின் அரசியல் அடக்குமுறைகள், ஊடக கட்டுப்பாடுகள் குறித்து ஐநா சபை கவலை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சிறைவைக்கப்படுவது குறித்து மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுரோ பல்வேறு முறைகேடுகளைக் கையாண்டு வெற்றிபெற்றதாக சர்வதேச சமூகங்கள் விமர்சித்தன. ஐரோப்பிய ஒன்றியம் அவர் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல என்றது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வெனிசுலா மீது பொருளாதார தடைகள் விதித்ததுடன், அரசியல் அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனினும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வெனிசுலாவுக்கு ஆதரவளித்து வருகின்றன.

இந்த ஆபத்தான சூழலில் எதிர்க்கட்சிகள் கூட ஜனாதிபதி நிக்கோலஸ் மாதுரோவுக்கு எதிராக பேச அஞ்சின. நீண்ட கனமான அமைதியை உடைத்தவர் மரியா கொரினா மச்சாடோ.

மரியா கொரினா மச்சாடாவின் அரசியல் வாழ்க்கை

மரியா கொரினா மச்சோடா 1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பிறந்தார். கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த தனியார் பள்ளியில் கல்விபெற்றவர். பொறியாளராக உருவானார்.

இவரது குடும்பம் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால், மனித உரிமை செயல்பாடுகளை மேற்கொண்டார்.

1999 முதல் 2025 வரை 25 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் வெனிசுலாவின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார் மரியா. 2000ம் ஆண்டு முதல் 2010 வரை தேர்தல் அரசியலில் ஈடுபடாவிடாலும், 2002ம் ஆண்டு அலெஜான்ட்ரோ பிளாஸ் என்பவருடன் இணைந்து Súmate என்ற அமைப்பை உருவாக்கி, ஜனநாயகம் மற்றும் தேர்தல் வெளிப்படைத்தன்மைக்காகப் பணியாற்றினார்.

அதன்பிறகு 2010ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று 2011-2014 வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு அரசின் தடுப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் மிகக் குறைவாகவே பொதுவெளியில் தோன்றினார்.

மரியா கொரினா மச்சோடா

குறிப்பாக 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் பிராசரம் செய்ய பல தடைகளை விதித்தது வெனிசுலா அரசு. பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவிக்கப்படாத இடங்களில் பிராசரம் செய்தார் மச்சோடா. அரசு ஊடகங்கள் அவரது பிரசாரத்தை காட்டவில்லை, தனியார் ஊடகங்களும் அழுத்தம் காரணமாக மிகக் குறைவாகவே காட்டின. பெரும்பாலும் சமூக வலைத்தளங்களையும் இணையத்தையும் நம்பி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மச்சோடா தேர்தலில் நிச்சயமாக நிக்கோலஸ் மதுரோவை வெற்றி பெறுவார் என எண்ணப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் அவர் தேர்தலில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.

(எனினும் நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியைப் பல சர்வதேச அமைப்புகளும் வெனிசுலா மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா, அர்ஜென்டினா, உருகுவே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்க்கட்சி சார்பாக போட்டியிட்ட எட்மண்டோ கோன்சாலெஸ் உர்ருதியாவே வெற்றிபெற்றதாகக் கூறுகின்றன. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.)

2025 ஜனவரி மாதம் பொதுவெளியில் தோன்றியபோது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு அவரைப் பொதுவெளியில் காணப்படவில்லை. தொடர்ந்து அரசாங்கத்தின் மிரட்டல்களுக்கு ஆளாகும் அவர், தனது உயிருக்கே ஆபத்தான சூழல் இருந்தாலும் வெனிசுலாவை விட்டு அவர் வெளியேறவில்லை.

பிரசாரத்தில் மச்சோடா

வெனிசுலாவில் சோசலிச - சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் மச்சோடா, தனியார்மயப்படுத்தப்பட்ட சந்தை, வெளிநாட்டு முதலீடு, அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் நல்லுறவு ஆகியவற்றை ஆதரிக்கிறார். அவரது தொண்டர்களால் சுருக்கமாக MCM என்றும் 'இரும்புப் பெண்மணி' என்றும் அழைக்கப்பட்டார்.

வெனிசுலாவில் ஜனநாயகத்தின் முகமாக உருவாகியிருக்கும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்ற கௌரவம் கிடைத்துள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக அவர் பொதுவெளியில் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசுலாவில் நேர்மையான தேர்தல் நடைபெற்றால் அவர் ஒருநாள் வெனிசுலாவின் ஆட்சியாளராகவும் திகழலாம்...

Nobel Peace Prize: "நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்" - மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ட்ரம்ப்பின் கனவு பழிக்காமல் போனது. எனினும் நோபல் ... மேலும் பார்க்க

"16-ம் நாள் காரியம் முடிந்ததும் உண்மைகளைச் சொல்வோம்"- டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ஆதவ் அர்ஜுனா

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தே... மேலும் பார்க்க

"போரை நிறுத்தும் பணியை ட்ரம்ப் தொடர்வார்" - நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன், தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கடந்த ஏழெட்டு மாதங்களாகக் கூறி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.அமெரிக்காவின் உதவியுடன் கா... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்!’ -தகிக்கும் திமுக

`புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் ... மேலும் பார்க்க