'ட்ரம்புக்கு நோபல் பரிசு' - வைரலாகும் இத்தாலி பிரதமரின் ரியாக்ஷன் - என்ன நடந்தத...
IND VS WI: 'அஷ்வின் ஓய்வுக்குப் பின், பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்குது' - தொடர் நாயகன் ஜடேஜா
இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்றிருக்கிறார்.
அதன் பிறகு பேசிய ஜடேஜா, "அஷ்வின் ஓய்விற்கு பிறகு, பந்து வீசுவதற்கு அதிக வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
சாதனைகள் பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். அணியின் வெற்றிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறேன்.

கிரிக்கெட்டிற்காக என்னுடைய 100 சதவிகிதத்தையும் கொடுக்க நினைகிறேன்.
இது என்னுடைய மூன்றாவது மேன் ஆஃப் தி சீரிஸ் ட்ரோபி, அதனால் இதை வீட்டுக்கு கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.