செய்திகள் :

ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் தான்! - ஏன்?

post image

ஜனவரி 1, 2025-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.4,600-உம், பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.37,000 உயர்ந்துள்ளது.

என்ன காரணம்?

இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தின் காரணமாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இன்னமும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தங்கம்
தங்கம்

அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இது நிச்சயம் பிற உலக நாடுகளைப் பாதிக்கிறது.

இன்னொரு புறம், ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள், அமெரிக்க டாலரின் மதிப்பை வீழ்ச்சி அடைய செய்கிறது.

மேலும், பல உலக நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.

உலக நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.

இவை எல்லாமே... தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணங்கள்.

இரு நாடுகள் காரணம்

ஆனால், கடந்த ஒரு வாரமாக, சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது.

கடந்த செவ்வாய் கிழமை (அக்டோபர் 7) முதல் இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.625-ம், பவுனுக்கு ரூ.5,000-மும் உயர்ந்துள்ளது.

இதற்கு காரணமாக அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளைக் கூறலாம்.

உலக அளவில் கனிம வளங்களை அதிகம் வைத்திருக்கும் மற்றும் சப்ளை செய்யும் டாப் நாடு சீனா. அது கடந்த 9-ம் தேதி, தாங்கள் ஏற்றுமதி செய்யும் எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி விதித்தார்.

அதற்கு சீனா நிச்சயம் எதிர்வினையாற்றும். அதனால், மீண்டும் உலகில் வர்த்தகப் போர் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயத்தினாலும், தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலர்களைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

இதனால், சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களால், அது இந்தியாவில் பிரதிபலித்து ஒரு நாளுக்கு இருமுறை தங்கம் விலை மாறுகிறது.

ஏற்கெனவே எகிறி கொண்டிருந்த தங்கம் விலையை, இந்தப் பயம் மேலும் உயர்த்துகிறது.

புதிய உச்சம்! ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,960 உயர்வு; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! | Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.245, பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்துள்ளது.தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,825 ஆகும்.தங்கம்இன்றைய ஒரு பவுன் த... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு ரூ.200 உயர்வு; வெள்ளி தாறுமாறு உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.25-ம், ஒரு பவுனுக்கு ரூ.200-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,525 ஆகும்.தங்கம்இன... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.நேற்று மதியம் தங்கம் விலை மீண்டும் ஏறியது. அதன் பிறகு, ஒரு கிராம் தங்கம் ரூ.1... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கம் விலை; இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.165-ம், பவுனுக்கு ரூ.1,320-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.நேற்று மதியம், தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, நேற்று மதியம் முதல், தங்கம் ... மேலும் பார்க்க

Gold Rate : பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை - இன்னும் உயருமா?

தங்கம்தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது. நேற்று மதியம் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. நேற்று மதியம் தங்கம... மேலும் பார்க்க

Gold Rate: "அம்மாடியோவ்!" - பவுனுக்கு ரூ.90,000-த்தைத் தாண்டிய தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?

தங்கம் | ஆபரணம்இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-உம், பவுனுக்கு ரூ.800-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,300 ஆக விற... மேலும் பார்க்க