கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை - மகன் டு கொதிக்கும்...
Gold Rate : பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை - இன்னும் உயருமா?

தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.
நேற்று மதியம் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. நேற்று மதியம் தங்கம் கிராமுக்கு ரூ.11,385-க்கும், பவுனுக்கு ரூ.91,080-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு ரூ.170 ஆக விற்பனை ஆனது. தங்கம், வெள்ளி என இரண்டுமே நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.11,400 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,200 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.171 ஆகும்.

தற்போது பல உலக நாடுகளில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.
அடுத்ததாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
உலக நாடுகளின் வங்கிகள் குறிப்பாக சீனா தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.
இந்தக் காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்புகள் தான் மிக அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.