சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கா...
'தங்கம் விலை தொடர்ந்து உயர்வது ஏன்?' - ரிசர்வ் வங்கியின் கவர்னர் விளக்கம்
நேற்று டெல்லியில் கௌடில்ய பொருளாதார மாநாடு, 2025 மாநாடு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தங்கம் விலை உயர்வு குறித்து பேசியுள்ளார்.
தங்கம் உயர்வு ஏன்?
சஞ்சய் மல்ஹோத்ரா பேசும்போது, "முன்பெல்லாம், உலகளவில் நிலையற்ற தன்மை ஏற்படும்போது, எண்ணெய் விலை அதிகம் உயரும். ஆனால், இப்போது அப்படி இல்லை. எண்ணெய் விலை பெரிதாக உயரவில்லை. குறிப்பிட்ட விலைகளுக்குள்ளேயே எண்ணெய் விலை நீடித்து வருகிறது.

இந்தியா மட்டுமல்ல... உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரங்கள் தங்களது வளர்ச்சிக்கு எண்ணெய்யை குறைவாகப் பயன்படுத்துவது தான் இதற்கான காரணம்.
அதற்கு பதிலாக, முன்பு இருந்து எண்ணெய் விலை மாற்றம் போல, தற்போது தங்கம் விலை மாற்றம் ஏற்படுகிறது. ஆக, தங்கம் இப்போது உலக நிலையற்ற தன்மையின் அளவீடாக இருக்கிறது" என்று தங்கம் விலை உயர்வு குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்தியா...
உலக அளவிலான போர்கள், வர்த்தக மாற்றங்கள் போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளின் வங்கிகள் இப்போது தங்கம் வாங்கிக் குவித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.