தமிழ்நாட்டிற்கு நிரந்தர DGP நியமனம் எப்போது? தொடரும் இழுபறி; UPSC கூட்டத்தில் நட...
இந்த வாரம் மட்டும் தங்கம் விலை 2% உயர்வு; நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் உச்சம்! - என்ன நடக்கிறது?
இன்று சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. நேற்றை விட, இன்று கிராமுக்கு ரூ.110-உம், பவுனுக்கு ரூ.880-உம் குறைந்துள்ளது. இதனால், தற்போது தங்கம் கிராமுக்கு ரூ.10,840 ஆகவும், பவுனுக்கு ரூ.86,720 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.
ஆனால், சர்வதேச சந்தையில் காட்சியே வேறாக இருக்கிறது. நேற்று தங்கம் சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.
அந்த விலை உயர்வு குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பகிர்கிறார்.
"அமெரிக்க அரசு முடக்கம் காரணமாக, நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.
அது ஒரு அவுன்ஸிற்கு 3,904 டாலர்கள் ஆகும்.

அதன் பின், சந்தையில் ப்ராஃபிட் டேக்கிங் நடந்து, தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 3,855 டாலர்கள் என வர்த்தகம் ஆகி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 3,500 - 3,600 டாலர்கள் புதிய உச்சமாக இருந்தது, இப்போது அது 3,900-ஐ தாண்டி உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த வாரம், சர்வதேச சந்தையில், தங்கம் விலை 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வெள்ளி 1.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது," என்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.
