செய்திகள் :

தனது முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

post image

டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் விளாசியதை இந்திய ராணுவத்துக்கு இளம் வீரர் துருவ் ஜுரெல் சமர்ப்பித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அசத்தினர். 24 வயதாகும் இளம் வீரரான துருவ் ஜுரெல் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 210 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

சதம் விளாசியதை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக துருவ் ஜுரெல் கொண்டாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு

டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தைப் பதிவு செய்த நிலையில், துருவ் ஜுரெல் தனது சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியதை கொண்டாடியதை என்னுடைய அப்பாவுக்கும், சதம் விளாசியதை கொண்டாடியதை இந்திய ராணுவத்துக்கும் சமர்ப்பிக்கிறேன். போர்க்களத்தில் நமக்காகப் போராடும் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

அணியில் விளையாட இடம் கிடைக்காவிட்டாலும், தொடர்ச்சியாக கடினமாக உழைத்தேன். அதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசினேன். கடின உழைப்பின் மூலம் இந்த சதம் எனக்கு கிடைத்துள்ளது என்றார்.

துருவ் ஜுரெலின் தந்தை கார்கில் போரின்போது, இந்திய ராணுவத்தில் சேவையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Young batsman Dhruv Jurel has dedicated his first Test century to the Indian Army.

இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபா... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே... கே.எல்.ராகுல் கூறுவதென்ன?

டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் கடந்த 11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளது குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகு... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில்... மேலும் பார்க்க

ஆசாத் காஷ்மீரா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா? சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஆசாத் காஷ்மீர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா மிர் பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற... மேலும் பார்க்க

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது. மழையின் காரணமாக இந்தப் போட்டி 2.1 ஓவர்களில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள... மேலும் பார்க்க

ஜடேஜா - துருவ் ஜுரேல் அசத்தல் அரைசதம்: வலுவான நிலையில் இந்தியா!

ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ... மேலும் பார்க்க