அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது.
மழையின் காரணமாக இந்தப் போட்டி 2.1 ஓவர்களில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டி20யில் ஆஸி. அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மழையின் காரணமாக போட்டி 9 ஓவர்களாகக் குறைக்கபட்ட நிலையில், 2.1 ஓவர்களில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸி. டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கைவிடப்பட்ட போட்டி ஆசுவாசத்தை அளித்ததாகக் கூறினார்.
சேப்பல்-ஹாட்லி கோப்பையை கடைசியாக நியூசிலாந்து அணி 2017-க்குப் பிறகு வென்றதே இல்லை. இந்தத் தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது.
கடைசி டி20 நாளை (அக்.4) நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து தொடரை சமன்செய்யுமா அல்லது ஆஸி. மீண்டும் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.