செய்திகள் :

இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலி

post image

இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் க்ராசிட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையில் ஆசிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இரண்டு இந்தியர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர். மேலும் குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

இதுகுறித்து இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், க்ராசிட்டோ அருகே நடந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததற்கு தூதரகம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது . காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Two Indians were among three people killed in a road accident in Italy's Grosseto on Friday morning.

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது உறுதி!

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வருவகிறார் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அ... மேலும் பார்க்க

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும்(வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

இந்திய படங்களைத் திரையிட மறுக்கும் கனடாவின் திரையரங்குகள்! ஏன்?

கனடாவில் பல்வேறு திரையரங்குகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் இந்திய படங்கள் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.கனடாவின் டொராண்டோ நகரத்தில் உள்ள ஃபிலிம்.சிஏ சினிமாஸ் நிறுவனத்தின் திரையரங்... மேலும் பார்க்க

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற... மேலும் பார்க்க

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

மியான்மரில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மைய அறிக்கையின்படி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

அமெரிக்காவின் அவமதிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ... மேலும் பார்க்க