அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நேற்று (அக்டோபர் 2) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது.
கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மூவர் சதம் விளாசல்; 286 ரன்கள் முன்னிலை
41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், ஷுப்மன் கில் 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரெல் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 210 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் அவரது 6-வது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 176 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
India are in a strong position with a lead of 286 runs in the first Test against the West Indies.
இதையும் படிக்க: மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!