செய்திகள் :

GRT: அன்னதானம், சத்திர கட்டுமானத்திற்காக ரூ. 50 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

post image

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி அதன் பிறகு மதிப்பை உருவாக்குவதில் உள்ளது என்று நம்புகிறது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நிறுவனம் சமூகப் பொறுப்பைத் தனது முக்கிய நோக்கமாக ஏற்று மக்களின் வாழ்வை உயர்த்தவும், சமூகத்தைச் சக்திவாய்ந்ததாக மாற்றவும், அதன் செழிப்பை விரிவுபடுத்துகிறது.

ஜிஆர்டி யின் இந்த வளர்ச்சி பயணத்தில் மீண்டும் திருப்பிக் கொடுப்பது என்ற இந்த ஆழ்ந்த உறுதியும் கருணையும், நேர்மையும் கொண்டு சமூக சேவையில் தனது தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபடுவது அவர்களின் மைய நோக்கமாக வெளிப்படுகிறது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

இந்தக் கண்ணோட்டத்திற்கு இணங்க ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சேலத்தில் உள்ள அயோத்தி ஆர்ய வைஸ்ய அறக்கட்டளைக்கு 50,00,000 ரூபாயை நன்கொடையாக வழங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் இந்த முயற்சி அறக்கட்டளைக்கு அன்னதானம் வழங்கவும். சத்திரம் கட்டி உதவி தேவைப்படும் மக்களுக்குக் குறைந்த விலையில் தங்குமிடத்தை உறுதி செய்யவும் உதவுகிறது. ஊட்டச்சத்து மற்றும் தங்குமிடம் இரண்டும் மிகவும் தேவைப்படுபவர்களுக்குச் சென்றடைவதைத் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜிஆர்டி ஜுவல்லரஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர் ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள், "ஜிஆர்டியில் சமூகத்திற்குச் சேவை செய்வதும், சமூகத்தின் பின்தங்கிய மக்களைப் பராமரிப்பதும் நன்றியுணர்வின் உண்மையான வடிவம் என்று நாங்கள் நம்புகிறோம். மிகவும் தேவையுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் முயற்சிகளை ஆதரிக்கும் ஒரு நோக்கத்திற்கு நன்கொடை வழங்கி பங்களிப்பதில் நாங்கள் நன்றியை உணர்கிறோம்" என்று கூறினார்.

`StartUp' சாகசம் 42: "பாலில் கொட்டிக் கிடக்கும் லாப பிசினஸ்" - நம்பிக்கை தரும் `தமிழ் பால்' நிறுவனம்

உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2023-24ம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 239.3 மில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்தது. உலக விநியோகத்தில் சுமார் 25 சதவிகித பங்களிப்பு... மேலும் பார்க்க

SharonPly: முன்னாள் இராணுவ அதிகாரிகளை கௌரவித்த ஷரான் பிளை–ன் 6 வது ‘ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்’ விருதுகள்

சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நம் நாட்டின் வெற்றிக்கும், புகழுக்கும் பின்புல ஆதரவை வழங்கிய குரல்களுக்கு சொந்தக்காரர்களான பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள்... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 41: ``மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர்’’ - முனைவர் ந.தெய்வசுந்தரம் சாதனை

உலக அளவில் தமிழ்மொழி , தமிழ்நாட்டிலும், இலங்கை, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளிலும் ஆட்சி மொழியாக நீடிக்கிறது. மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர... மேலும் பார்க்க

'India’s Coolest Store to Work In' விருதை வென்ற பிரின்ஸ் ஜூவல்லரி

தென் இந்தியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நகைக்கடைகளில் ஒன்றான Prince Jewellery, இந்தியாவின் Coolest Store Awards (ICSA 2025) 6 வது பதிப்பில், மிகுந்த கௌரவமாகக் கருதப்படும் “India’s Coolest Store to W... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.75 லட்சம்; சத்துமாவு தொடங்கி உணவகம் வரை... சிறுதானிய மதிப்புக்கூட்டலில் மதுரைப் பெண்

மதிப்புக்கூட்டல்மதுரை மாவட்டம், கள்ளிக் குடியில் இயங்கி வருகிறது, சிறுதானிய நளபாகம். காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை செயல்படும் இந்த உணவகத்தில், தினை பால், கம்பு சூப், கேழ்வரகு போளி, வெள்ளைச் சோள... மேலும் பார்க்க

Mushroom lady: வறுமையை ஒழித்த காளான்; 70,000 பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பீனா தேவி

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் தில்காரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பீனா தேவி. இவர் தன் 4 குழந்தைகளுக்கு சாப்பாடுகூட கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் இருந்தார். சொந்தமாக நிலமும் கிடையாது. இதனால... மேலும் பார்க்க