செய்திகள் :

ஆழ்கடலுக்குள் உயிருக்குப் போராடிய நீச்சல் வீரர்; ஆப்பிள் வாட்ச்சால் உயிர் தப்பியது எப்படி?

post image

மும்பையில் சமீபத்தில் கூகுள் காட்டிய வழியைப் பின் பற்றிச் சென்ற ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்தனர். பெண் காரில் சென்று நேரடியாகச் சென்று கடலுக்குள் விழுந்தார். மற்றொரு நபர் பைகிள் சென்று கடலுக்குள் விழுந்துவிட்டார். மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் மூலம் உயிர் தப்பி இருக்கிறார்.

மும்பையில் உள்ள இ காமர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் க்ஷிதிஜ் ஜோடபே. இவர் நீச்சல் அடிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவர். அவர் கடலில் ஆழமான பகுதி வரை சென்று நீச்சலடிப்பது வழக்கம்.

ஸ்கூபா டைவிங்
ஸ்கூபா டைவிங்

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து நீச்சல் அடிக்கும் ஜோடபே பாண்டிச்சேரி அருகில் உள்ள கடலில் நீச்சலடிக்கச் சென்றார். அவர் ஆக்ஜிசன் சிலிண்டர் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்களின் துணையோடு கடலுக்குள் குதித்தார்.

அவர் கடலில் 36 மீட்டர் ஆழத்திலிருந்தபோது அவரது இடுப்பிலிருந்த வெயிட் பெல்ட் லூஸானது. இதனால் அவர் வேகமாக மேல் நோக்கித் தள்ளப்பட்டார். அவரது கையில் கட்டப்பட்டு இருந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா திடீரெனச் செங்குத்தாக மேல் நோக்கி ஏறுவதை உணர்த்தியது. உடனடியாக அதன் திரையில் எச்சரிக்கை செய்யத்தொடங்கியது.

வேகமாக மேல் செல்லும் பட்சத்தில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மேலே செல்லும் வேகத்தைக் குறைக்குமாறு ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்தது.

ஆனால் மேலே செல்லும் வேகத்தை ஜோடபேயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆப்பிள் வாட்ச் அபாய ஒலியை எழுப்பத் தொடங்கியது. அந்த அபாய ஒலியைத் தொடர்ந்து மேலே இருந்த அவரது பயிற்சியாளர் உடனடியாக அவருக்கு உதவ கடலுக்குள் சென்றார்.

எடை பெல்ட் அவிழ்ந்து இருந்ததால் ஜோடபே 10 மீட்டர் அளவுக்கு மேல் நோக்கி வந்திருந்தார். தொடர்ந்து மேலே வந்து கொண்டிருந்தார். அந்நேரம் மேலே இருந்து சென்ற அவரது பயிற்சியாளர் ஜோடபேவிற்குத் தேவையான உதவிகள் செய்தார். இதனால் அவர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.

ஆபத்திலிருந்து தப்பியது குறித்து ஜோடபே கூறுகையில், ''கடிகாரத்தில் இப்படி ஒரு அம்சம் இருப்பது எனக்குத் தெரியாது. நான் உண்மை நிலையை உணரும் முன்பே, என் கடிகாரம் எனக்கு எச்சரிக்கை காட்டத் தொடங்கியது.

நான் அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தபோது, ​​அது முழு அளவில் ஒலிக்கத் தொடங்கியது. உடனே என் பயிற்றுவிப்பாளர் வந்து எனக்கு உதவி செய்தார்'' என்று அவர் கூறினார்.

ஆப்பிள் வாட்ச் SE | Apple Watch SE
ஆப்பிள் வாட்ச் SE | Apple Watch SE

இது குறித்து ஆப்பிள் வாட்ச் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு தனது அனுபவத்தை ஜோடபே எழுதி இருந்தார். அதற்கு டிம் கும் அளித்திருந்த பதிலில், ''உங்கள் பயிற்சியாளர் அலாரம் சத்தத்தைக் கேட்டு விரைவாக அவர் உங்களுக்கு உதவியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஒரு கரடுமுரடான, சாகசத்திற்குத் தயாரான சாதனமாகக் கருதப்படுகிறது. அவசரக் கால ஒலி எழுப்புதல் உட்படப் பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இக்கடிகாரத்தில் இருக்கும் அலாரம் 180 மீட்டர் தூரம் வரை கேட்கக்கூடியது. அதிக சத்தத்துடன் இரண்டு வகையான ஒலிகளை மாறி, மாறி வெளியிடுகிறது.

``எலுமிச்சை, பூஜை இல்லாமல் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் இல்லை'' - டெஸ்லா கார் வாங்கியவர் பதிவு வைரல்

எந்த ஒரு புதிய வாகனம் விலைக்கு வாங்கினாலும் அதனை உடனே கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பழைய வண்டியை விலைக்கு வாங்கினாலும் அதற்கு ஒரு பூஜை செய்யாமல் இருப்பது கிடையாது... மேலும் பார்க்க

சம்பள வாக்காளர்களை உருவாக்கும் மோடி; மும்பையை அதானியிடம் பா.ஜ.க கொடுத்துவிடும் என தாக்கரே எச்சரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் தசராவையொட்டி மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். பால் தாக்கரே இறந்த பிறகு அதனை உத்தவ் தாக்கரே ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

மும்பையில் இரவு வாழ்க்கை ஆரம்பம்; மகா.வில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இரவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் திறந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: குழந்தைகளுக்குப் பெயர் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்; பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதையே ஒரு தொழிலாக மாற்றி, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் சான் ... மேலும் பார்க்க

75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அது போன்று மனைவி இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்த முதியவர் தனது 75 வயதில் தனக்கு துணை தேவை என்று 35 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை - கயிற்றால் கட்டி, வனத்துறையிடம் ஒப்படைத்த சிங்கப்பெண்!

நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைபெண்கள் சில நேரங்களில் எதையும் எதிர்த்து போராடும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பவர். எதாவது ஆபத்து வரும் போதுதான் அவர்களின் துணிச்சல் வெளியில் தெரிய வரும். பல பெண்கள்... மேலும் பார்க்க