செய்திகள் :

காந்தாரா சாப்டர் - 1 காட்சிகளை யாரும் பகிர வேண்டாம்; சுவாரசியம் போய்விடும்! -படக்குழு வேண்டுகோள்

post image

‘காந்தாரா சாப்டர் - 1’ திரைப்படக் காட்சிகள் எதையும் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் ரிஷப் ஷெட்டி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை(அக். 3) வெளியிட்டுள்ளதொரு பதிவில்:

‘திருட்டுத்தனமாக விடியோக்கள் பகிரப்படுவதை ஊக்குவிக்க வேண்டாமென உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். திருட்டுத்தனமாக விடியோக்கள் பகிரப்படுவதால், ஒரு திரைப்படம் பாதிப்பைச் சந்திப்பதுடன் மட்டுமில்லாது, தங்கள் கனவுகளுக்கு உயிரூட்ட கடுமையாக உழைத்துள்ள ஆயிரக்கணக்கானோரின் உழைப்பும் பாதிக்கப்படுகிறது.

‘காந்தாரா சாப்டர் - 1’ உங்களுக்காவே பிரத்யேகமாக அதன் ஒலி, காட்சி, அதிலுள்ள உணர்ச்சி ஆகிய ஒவ்வொன்றையும் பெரிய திரையில், அதாவது திரையரங்குகளுக்காகவே உருவாக்கப்பட்டது.

ஆகவே, ரசிகர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது இதைத்தான்... திரையரங்குகளில் படத்தை படம்பிடித்து அதன்பின் அந்த விடியோக்களை பகிர வேண்டாம்!

சினிமாவிடம் இருக்கும் மேஜிக்கை இந்தச் செயல் பறித்து விடுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தாயாகிறார் கத்ரீனா கைஃப்..! கணவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தாய்மைப்பேறு அடைந்துள்ளார். இந்தத் தகவலை கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் தம்பதி சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த நட்சத்திர தம்பதியின் திரும... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று(செப்.23) காலை சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆபரேஷன் நும்கூர்வ... மேலும் பார்க்க

தாதா சாகேப் பால்கே விருது: மலையாள சினிமாவுக்கு கிட்டிய கௌரவம் - மோகன்லால் நெகிழ்ச்சி!

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் மோகன்லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை சிறப்பிக... மேலும் பார்க்க

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன்: ஷ்ரேயா கோஷால் உருக்கமான பதிவு!

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன் என்று பாடகி ஷ்ரேயா கோஷால் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். வட இந்தியாவில் பிரபல பாடகராகப் புகழ்பெற்ற ஜுபின் கர்க் காலமானார். அவரது உயிர் சனிக்கிழமை(செப். 20) பிரிந... மேலும் பார்க்க

மண்டோதரி கதாபாத்திரத்தில் பூனம் பாண்டே: பாஜகவிலிருந்து வலுக்கும் எதிர்ப்பு!

ராவணன் மனைவி மண்டோதரியாக ஹிந்தி நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு பாஜகவிலிருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது.தில்லியில் புகழ் பெற்ற நாடக சபையான ‘ராம் லீலா குழு’ பிரபல ஹிந்தி நடிகை பூனம் பாண்டேவை ராமாயண காதை ந... மேலும் பார்க்க

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளது. 65 வயதான மோகன்லால் திரைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், மோகன்லாலுக்கு செப். 23-இல... மேலும் பார்க்க