அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை உயர்ந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் 224 புள்ளிகள் அதிகரித்து 81,207 புள்ளிகளகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 57.95 புள்ளிகள் உயர்ந்து 24,894 ஆக நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 81,251.99 புள்ளிகளும் பிறகு குறைந்தபட்சமாக 80,649.57 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 223.86 புள்ளிகள் உயர்ந்து 81,207.17 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 57.95 புள்ளிகள் உயர்ந்து 24,894.25 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல் அதிகபட்சமாக 3.40 சதவிகிதம் உயர்ந்த நிலையில் பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, லார்சன் & டூப்ரோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகளும் உயர்ந்தன. அதே வேளையில் டெக் மஹிந்திரா, மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
பிஎஸ்இ உலோகக் குறியீடு இன்று 1.85 சதவிகிதம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி 6.18 சதவிகிதமும், நேஷனல் அலுமினியம் கம்பெனி 3.10 சதவிகிதம் மற்றும் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் 2.87 சதவிகிதம் உயர்ந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,185 பங்குகள் வர்த்தகமான நிலையில், 2,140 பங்குகள் உயர்ந்தும் 960 பங்குகள் சரிந்தும் 85 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
வங்கி, உலோகம் மற்றும் ஆட்டோ பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தன. நிஃப்டி வங்கி 241 புள்ளிகள் உயர்ந்து 55,589 ஆகவும், நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 474 புள்ளிகள் உயர்ந்து 57,503 ஆகவும் உள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் உலோக பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் முன்னணி வகுத்தன. விமானப்படை தினத்திற்கு முன்னதாக, பாதுகாப்புப் பங்குகளும் 2% க்கும் அதிகமாக உயர்ந்தன.
நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் மற்றும் நால்கோ உள்ளிட்ட உலோகப் பங்குகள் பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கு வழிவகுத்தன.
இன்றைய உற்சாகமான விற்பனை தரவுகளின் அடிப்படையில் ஹீரோ மோட்டோகார்ப் 2% க்கும் அதிகமாக உயர்ந்தது. பெப்சிகோவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்ததை அடுத்து யுபிஎல் 2% க்கும் அதிகமாக உயர்ந்தது.
மிட்கேப் பங்குகளில் எம்ஆர்பிஎல், எல் அண்ட் டி ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் ஜிங்க், வோடபோன் ஐடியா மற்றும் ஆதித்யா பிர்லா கேபிடல் ஆகியவை உயர்ந்த நிலையில் பிஎன் காட்கில் மற்றும் பிசி ஜுவல்லர் உள்ளிட்ட பங்குகள் பண்டிகை விற்பனை முன்னிட்டு 5% வரை உயர்ந்தன.
கோல் இந்தியா பங்குகள் நிஃப்டி-யில் கிட்டத்தட்ட 2% சரிந்தன. காலாண்டு தகவலின் அடிப்படையில் இந்தியன் வங்கி 3% க்கும் அதிகமாக உயர்ந்த போதிலும், யூனியன் வங்கி 1% க்கு அருகில் சரிந்தன.
ஒப்பந்தச் செய்திகளின் அடிப்படையில் 4% க்கும் அதிகமாக சரிந்தது அதன் ஆறு நாள் வெற்றித் தொடரை முறியடித்தது சம்மன் கேபிடல்.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.86 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 64.61 அமெரிக்க டாலராக உள்ளது.
மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் தசராவை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) பங்குச் சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க: டிவிஎஸ் விற்பனை 12% உயா்வு