செய்திகள் :

டிவிஎஸ் விற்பனை 12% உயா்வு

post image

கடந்த செப்டம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 12 சதவீதம் உயா்ந்தது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,41,064-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,82,495 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2024-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 4,71,792-ஆக இருந்த நிறுவன இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 11 சதவீதம் வளா்ச்சியடைந்து 5,23,923-ஆக உள்ளது. இருசக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 3,69,138-லிருந்து 12 சதவீதம் அதிகரித்து 4,13,279-ஆக உள்ளது.

2024 செப்டம்பரில் 1,11,007-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2025 செப்டம்பரில் 10 சதவீதம் அதிகரித்து 1,22,108-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச இருப்புக்கான கட்டணம்: ஐஓபி தள்ளுபடி

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கு விதிக்கப்படும் கட்டணங்களை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து வங்கி ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 85,120 -க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது.இதன்மூலம், தங்கத்தின் விலை கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 2,000 அதிகரித்துள்ளது, ரூ. 87 ஆய... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக நிறைவு!

மும்பை: உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தொடர்ந்து அந்நிய நிதி வெளியேறி வருவதால், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக ம... மேலும் பார்க்க

விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அறிமுகம்!

யூடியூப் பிரீமியம் லைட் மூலம் யூடியூப் செயலியில் இனி விளம்பரம் இல்லாமல், விடியோக்களை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.100க்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கைய... மேலும் பார்க்க

அந்நிய முதலீடு தொடர் வெளியேற்றம்: 97 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!

மும்பை: நிலையற்ற அமர்வுக்குப் பிறகு, இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவு வெளிவர உள்ள நி... மேலும் பார்க்க