அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் விஜயதசமி
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் விஜயதசமி திருநாளையொட்டி உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலில் விஜயதசமியையொட்டி உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சுவாமி வீதியுலா நிறைவு பெற்றதும் பின்புறம் உள்ள தோட்டத்தில் பெருமாள் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியுடன் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.
விஜயதசமியையொட்டி காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயில் அனந்தசரஸ் திருக்குளம் முன்பாகவும், யதோக்தகாரி பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ன்பாகவும் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.