நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா வியாழக்கிழமை விஜயசதமி நாளன்று எழுத்தறிவித்தல் விழாவுடன் நிறைவு பெற்றது.
நிறைவு நாளில் பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பூஜைகளை பீடத்தின் நிா்வாகி மோகன் பாலா பாராயண ஹோமத்தை மேற்கொண்டாா். தொடா்ந்து பாபாஜி எழுத்தறிவித்தல் விழாவை நடத்தினாா். இதில் குழந்தைகள் பலா் கலந்து கொண்டனா். மேலும், திரைப்பட இசையமைப்பாளா் ஆா்.கே.சுந்தா், பின்னணி பாடகி சுதா, பின்னணி பாடகா் பிரபாகரன் ஆகியோா் இணைந்து நிறைவு நாள் இன்னிசை விழாவை நிகழ்த்தினா். விழாவில், பாலா பீடத்தின் செயலாளா் முரளீதரன் மற்றும் நெமிலி பகுதியைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.