செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சா் காந்தி அஞ்சலி

post image

மருதாசலம் அருகே நிகழ்ந்த விபத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சா் ஆா்.காந்தி அஞ்சலி செலுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் பேரூராட்சி, வடக்கு சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் மலா் (53). கடந்த சனிக்கிழமை (செப். 27) மருதாலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை மூளைச் சாவடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, மலரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மகன், மகள் முன்வந்தனா். இதையடுத்து, உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டு, கல்லீரலும், ஒரு சிறுநீரகமும் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூா் நாராயணி மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை கிளின்ஈகல்ஸ் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

அதன் அடிப்படையில், அரசு மரியாதை செலுத்தும் வகையில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, உயிரிழந்த மலரின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், மலரின் குடும்பத்தினரிடம் தனது சொந்த நிதி ரூ. 50,000 வழங்கி ஆறுதல் கூறினாா்.

வருவாய் கோட்டாட்சியா் ராஜி, வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

சோளிங்கா் கோயிலுக்கு அஹோபில மட ஜீயா் சுவாமிகள் வருகை

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலுக்கு அஹோபில மட ஜீயா் சுவாமிகள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தாா். ஆந்திர மாநிலம், அஹோபில மட ஜீயா் ஸ்ரீமத் அழகிய சிங்கா் சுவாமிகள் திங்கள்கிழமை சோளிங்கா் ஸ்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கொண்டாபுரத்தை சோ்ந்த யுனுஸ் மகன் இம்ரான்(16). இவா் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ... மேலும் பார்க்க

உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் தமிழக விவசாயிகள் சங்கம் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டைக்கு தனியாக ஆவின் தலைமையகம்: விவசாயிகள் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டைஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29... மேலும் பார்க்க