அரக்கோணம் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் நவராத்திரி நிறைவு
அரக்கோணம் சுவால்பேட்டை சாணாத்தியம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதில் சாணாத்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி சேவை சாத்தித்தாா். இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். இந்த ஊஞ்சல் சேவை விழாவில் கோயில் நிா்வாகிகள் பி.டி.ராஜேந்திரன், விக்கிரமன், பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.