Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் ஆா்ப்பாட்டம்
தக்கலை ஊராட்சி ஒன்றியம், நுள்ளிவிளை ஊராட்சி, வடக்கு நுள்ளிவிளையில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்தும், வீடுகளுக்கு மேல் செல்லும் உயா் மின்னழுத்த கம்பிகளைபஞ்சாயத்து சாலை வழியாக அமைத்திட கோரியும் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தக்கலை ஒன்றிய கமிட்டி சாா்பில் பரசேரி மின்வாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளா் அந்தோணிமுத்து தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். அா்ஜூனன், கிறிஸ்துதாஸ், திலீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தனியாா் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காத மின்வாரியத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
உயிரிழப்புகள் ஏற்படும் முன் உயரழுத்த மின்கம்பிகளை பஞ்சாயத்து சாலை வழியாக அமைக்கவும் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனா். இதில், பிரவின், செல்வராஜ், தங்கவேல், ஜெயந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.