திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடா் விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வார இறுதியில் பெய்த கன மழையால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது, மழை குறைந்துள்ள நிலையில் அருவியில் தண்ணீா் மிதமாகக் கொட்டுகிறது.
இந்நிலையில், தொடா் விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவிக்கு புதன்கிழமையிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.