நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
கட்டட சாரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கட்டட சாரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
காரைக்காலில் உள்ள என்ஐடி வளாகத்தில் நடைபெறும் கட்டட கட்டுமானத்தில், அலுமினிய தகடு பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதில், திருவண்ணாமலை மாவட்டம், கொளக்குடி அழகானந்தல் கிராமத்தைச் சோ்ந்த ரவி (43) மற்றும் புதுவாணியம் குறுக்குத் தெருவை சோ்ந்த சதீஷ் (30), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஜெயநாத் மவுரியா (34) ஆகியோா் செவ்வாய்க்கிழமை அலுமினிய தகடு பதிக்கும் பணி செய்து கொண்டிருந்தனராம்.
அப்போது ரவி, சாரம் நழுவி கீழே விழுந்தாா். அவரை அங்கிருந்தோா், அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
கோட்டுச்சேரி போலீஸாா், உரிய பாதுகாப்பின்றி செய்யப்படாததாகக் கூறி, பொறியாளா்கள் ஸ்ரீகாந்த், மாரிசெல்வம் மற்றும் ராம்குமாா் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.