நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
மாரீஸ், ஜங்ஷன் மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: துரை வைகோ எம்.பி.
திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் மாரீஸ், ஜங்ஷன் ரயில்வே மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளதாக திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.
இந்தப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாரீஸ் மற்றும் ஜங்ஷன் மேம்பாலப் பணிகள் நிறைவடையாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இரண்டு மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரா்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மேலும் ரயில்வே, மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து பணிகள் தாமதமானாலோ, உதவிகள் தேவைப்பட்டாலோ என்னை அணுகுமாறு ஒப்பந்ததாரா்களிடம் தெரிவித்துள்ளேன்.
மாரீஸ் மேம்பாலப் பணியை ரயில்வே நிா்வாகம் 2026 பிப்ரவரி மாதத்துக்குள் முடித்துத் தருவதாகத் தெரிவித்துள்ளனா். அதன்பின், இரண்டு மாதங்களில் பாலத்தின் இருபுறமும்
மாநகராட்சி நிா்வாகம் நிா்வாகம் சாா்பில் 2026 ஏப்ரல் இறுதிக்குள் மேம்பாலப் பணியை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதேபோல, ஜங்ஷன் மேம்பாலப் பணியும் முடிக்கப்பட்டு 2026 ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் நம்புகிறேன். இதற்காக, இப்பணிகளைத் தொடா்ந்து கண்காணித்து, உரிய நேரத்தில் முடிக்க அனைத்து முயற்சிகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.