தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் ...
தவெக இரண்டாம் கட்ட தலைவா்களின் அஜாக்கிரதை: நடிகா் தாடி பாலாஜி
தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த இரண்டாம் கட்ட தலைவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக நடிகா் தாடி பாலாஜி தெரிவித்தாா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் உயிரிழந்தோா் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். பிறகு செய்தியாளா்களிடம் கூறுகையில், தவெகவில் இரண்டாம் கட்ட தலைவா்களுக்கு அரசியல் தெரியும்.
இருப்பினும், தலைவரை ஏன் தவறாக வழி நடத்துகின்றனா் என்பது தெரியவில்லை. தவெக தலைவருக்கு 100 சதவீதம் எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது.
தவெகவில் இரண்டாம் கட்டமாக உள்ளவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனா். தவெக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் கண்டிப்பாக நேரில் வருவாா் என்றாா் அவா்.