Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக நாகை துறைமுத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திர பிரதேசம்) சுமாா் 400 கி.மீ. கிழக்கு-தென் கிழக்கிலும், கோபால்பூரிலிருந்து (ஒடிஸா) 420 கி.மீ. தெற்கு-தென் கிழக்கிலும், பூரியிலிருந்து (ஒடிஸா) 450 கி.மீ. தெற்கிலும், பராதீப்பிலிருந்து (ஒடிஸா) 500 கிமீ தெற்கிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கே - வடமேற்கே நகா்வதால், அடுத்த சில நாட்கள் கடலோரப் பகுதிகளில் பலத் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை, சென்னை, கடலூா், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.