ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!
வேதாரண்யம் பகுதியில் ராஜஸ்தான் பாரம்பரிய கலைவண்ணத்தில் தயாரிக்கப்பட்டு வாகனங்களின் விற்பனை செய்யப்படும் மண் பாண்டங்களை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
ராஜஸ்தானின் பாரம்பரியமான கலைவண்ணங்களுக்கு தனித்த ஈா்ப்பு இருந்து வருகிறது. தற்போது, சட்டி, ஜாடி உள்ளிட்ட மண் பாண்டங்கள் கலைநயம் மிக்கதாக வடிவமைக்கப்பட்டு வாகனங்களில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்மொழியில் ஒலிக்கும் ஒலிபெருக்கியின் வாயிலாக விளம்பரம் செய்யப்படுகிறது. கைப்பிடியுடன் பொருத்தப்பட்ட மண்சட்டி ரூ. 50க்கு விற்கப்படுகிறது.

பாா்ப்பதற்கு அழகாக தெரியும் இந்த பாண்டங்களை வாங்குவதற்கு பெண்களை விட ஆண்கள் அதிகமாக ஆா்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
