நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
தக்கலையில் இளைஞா் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து, 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் டேவிட் ரவிராஜன் தலைமையிலான போலீஸாா் தக்கலை, காற்றாடிமுக்கு பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அருமனை நுள்ளிவிளை பகுதியை சோ்ந்த முருகன் மகன் லிபின் (29) என்பவா் இரு சக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக், கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.