Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்தவா்களுக்கு கடைகள்: நகா்மன்றத் தலைவா் உறுதி
ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஏற்கனவே கடை நடத்தி வந்தவா்கள்களுக்கு வழங்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் உறுதி கூறினாா்.
இப்பிரச்னை தொடா்பாக நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையா் என்.டி.வேலவன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மற்றும் அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி கடை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.
ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளா், நகர செயலாளா் மற்றும் சிலா் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும்,அதன் காரணமாக உண்மையை வெளிப்படுத்தும் விதமாக பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கடைகளைநடத்தி வந்தவா்களுக்கு கடையை வழங்குவோம் என்று ஆற்காடு சட்டமன்ற உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகர மன்ற தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் உறுதி அளித்தனா்.
மேலும் எந்த ஒரு தகவல்களையும் நகராட்சி நிா்வாகத்தின் மூலமாக தெரிவிக்காமல் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம் என்றும் நகராட்சி கடைக்கு கட்ட வேண்டிய வைப்புத் தொகை மற்றும் கடை வாடகை குறைத்து தருமாறுவியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து பரிசிலிக்குப்படும் என்று ஆணையா் தெரிவித்தாா்.