செய்திகள் :

வயிறு உப்புசம் முதல் ரத்தக்குழாய் சுத்தம் வரை; எலுமிச்சையின் வாவ் பலன்கள்!

post image

திருஷ்டி கழிக்கப் பயன்படுத்தப் படும் எலுமிச்சைக்கே திருஷ்டி சுற்றித்தான் போட வேண்டும். அந்த அளவுக்கு எலுமிச்சை பலன் நிறைந்தது. எலுமிச்சையின் ஏழு பலன்கள் இங்கே... சொல்கிறார் சித்தமருத்துவர் பத்மப்ரியா.

எலுமிச்சையின் மருத்துவ பலன்கள்
எலுமிச்சையின் மருத்துவ பலன்கள்

• வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.

• பொதுவாக, புளிப்புத் தன்மைகொண்ட பழங்கள், ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆன்டிபாக்டீரியலாகவும் இருப்பதால், சரும நோய்களை அண்டவிடாது.

• காலையில் வெந்நீரில் 5 - 10 மி.லி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

எலுமிச்சையின் மருத்துவ பலன்கள்
எலுமிச்சையின் மருத்துவ பலன்கள்

• வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்கச் சரியாகும்.

• கபம் அதிகம் இருந்தால், காலையில் எழுந்ததும் சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள், 10 மி.லி எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். சட்டென நிவாரணம் கிடைக்கும்.

• சிலருக்கு, வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருக்கும். இதற்குச் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.

• மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.

Doctor Vikatan: மன அழுத்தம், மனப் பதற்றம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க டெஸ்ட் உள்ளதா?

Doctor Vikatan: சாதாரண வருத்தம் தொடங்கி, மன அழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் பிரச்னைகள் பலருக்கும் இருக்கின்றன. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவோ, குணப்படுத்தவோ மருத்துவ சிகிச்சைகள் உள்ளனவா?பதில் சொல... மேலும் பார்க்க

இத்தனை நன்மைகள் செய்யுமா நீவுதல் சிகிச்சை? விளக்கும் இயற்கை மருத்துவர்!

’’வெகுஜன வழக்கில் நீவுதல் சிகிச்சையானது `மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே நீவுதல் சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது. மெசபடோமியர்கள் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தியிருக்கின... மேலும் பார்க்க

Doctor Vikatan: `ஆயுத பூஜைக்கு அரிசிப் பொரி' - வெயிட்லாஸுக்கு உதவுமா, இதன் நன்மைகள் என்ன?

Doctor Vikatan: ஆயுத பூஜைக்கு வீடு நிறைய அரிசிப்பொரி நிறையும். அதைச் சாப்பிடுவதால் ஆரோக்கியப் பலன்கள் ஏதும் உண்டா... அரிசிப் பொரி சாப்பிட்டால் வெயிட்லாஸ்முயற்சி எளிதாகுமா, அதை எப்படியெல்லாம் சாப்பிடலா... மேலும் பார்க்க

மார்பக ஆரோக்கியம்; எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

மார்பகங்கள் வெறும் அழகுக்கான அடையாளம் கிடையாது. அவை ஆரோக்கியத்துக்கான காரணியும்கூட.மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan:சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது?-ராஜா, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' - பரிந்துரை செய்யும் நிபுணர்

''பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படு... மேலும் பார்க்க