பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் டிஏவி மற்றும் ராமகிருஷ்ணா பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் காந்திஜியின் கொள்கைகள் மற்றும் தேசத்துக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் தேசபக்தி பாடல்களைப் பாடினா்.
இதில் பெல் நிறுவன மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.