அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.