செய்திகள் :

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

post image

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கியது. நவராத்திரி விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில்களிலும் வீடுகளிலும் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, நாள்தோறும் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

9 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழா நிறைவு பெற்றதையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள 14 கோயில்களின் உற்சவம் மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நவராத்திரி நிறைவு

நவராத்திரி நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு (அக்.2) பழைய பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், கவீஸ்வரர்கோயில், ராமர் கோயில், காட்டிநாயக்கனப்பள்ளி முருகன் கோயில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோயில், சோமேஸ்வரர் கோயில் என 14 கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்கார தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

இரவு முழுவதும் பல்வேறு வீதிகள் வழியாகச் சென்ற இந்த தேர்கள், கிருஷ்ணகிரி பழையபேட்டை, காந்தி சிலை அருகே ஒன்றுகூடி அணிவகுத்து நின்றன.

பின்னர் தேர்களுக்கு முன்பு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வன்னி மரத்தின் இலைகளை சேகரித்து வீடு, கடைகளில் வைத்தால் நல்லது நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Navaratri festival concludes in Krishnagiri Chariot parade of 14 temples

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு இன்று விசாரணை!

கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு தொடர்பான பொதுநல வழக்கு, சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை(அக்.3) விசாரிக்கப்பட உள்ளது.கரூா... மேலும் பார்க்க

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை!

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோயில் வளாகத்தில் ஒற்றைக் காட்டு யானை திடீரென நுழைந்ததால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த விடியோ சமூக வலைதளங்களில் வ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் வசித்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மற்றும் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக குறுஞ்செய்தி விடுக்கப்பட்டுள்ளது பரபரப... மேலும் பார்க்க

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திரா... மேலும் பார்க்க

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

கோவை: கோவையில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை, ராஜவீதியில் அமைந்துள்ளது ராமலிங்க செளடேஸ்வரி அம்மன... மேலும் பார்க்க