மால்வேர் தாக்குதலிலிருந்து தற்காப்பது எப்படி?
சைபர் தாக்குதல்களிலேயே மால்வேர் தாக்குதல் என்பது பயனர் பயன்படுத்தும் கணினி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்புக் கருவிக்குள் ஏதேனும் ஒரு மால்வேரை பயனருக்கே தெரியாமல் பதிவிறக்கி, தகவல்களை திருடுவது அல்லது முடக்குவது.
மால்வேர் தாக்குதலில் பல வகைகள் உள்ளன. வைரஸ், வார்ம், ட்ரோஜன் ஹார்ஸ், ரான்சம்வேர், விளம்பர தாக்குதல், ஸ்பைவேர், ரூட்கிட், பேக்டோர்ஸ், கீ-லாகர் போன்ற பல வகைகளில் மால்வேர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
தற்காப்பது எப்படி?
இயங்கு தள மென்பொருளை புதுப்பித்தல், அங்கீகாரம் பெற்ற வைரஸ் தடுப்பு/ஆன்டிமால்வேரை இயக்குதல்
சந்தேகத்துக்குரிய இணைப்புகள்/பாப்-அப்களைத் தவிர்ப்பது
நம்பகமான புரோகிராம்களை மட்டுமே கணினியில் பதிவிறக்கம் செய்வது,
ஏதேனும் தவறான விளம்பரங்கள் வந்தால், அந்த செய்தியின் மேல் மூலையில் உள்ள "X" ஐக் கிளிக் செய்து அந்தப் பக்கத்தை மூடிவிட்டு வெளியேறவும்.
ஒரு கணினியில் ஏராளமான புரோகிராம்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவசியம் மற்றும் பயன்படுத்துவோம் என்றால் மட்டும் பதிவிறக்கவும்.
இணையத்தைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
தெரியாத இணைப்புகளிலிருந்து வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மூலம் வந்தாலும் உஷாராக செயல்படவும்.
பாதுகாப்பாக இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
இணையதளங்களின் முகவரிகள் சரியாக இருக்கிறதா என்பதையும் ஆராயுங்கள்.
தனிப்பட்ட தகவல்களைக் கோரும் மின்னஞ்சல்களை தவிர்த்து விடுங்கள்.
ஒரு மின்னஞ்சலிலிருந்து, வங்கிக் கணக்கு லிங்க் வந்தால் அதன் மூலம் வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டாம்.
மால்வேரை நீக்குவது எப்படி?
குறிப்பிட்ட கணினியில் (விண்டோஸ், மேகோஸ், ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ்) மால்வேர் பைட்களை நிறுவவும்.
அவற்றை திறந்து, மால்வேர் வரையறைகளைப் புதுப்பிக்கவும்.
கணினியை ஆய்வு செய்ய ஸ்கேன் (கையேடு) செய்யவும்.
இயங்கும் செயல்முறைகள், பதிவேட்டில் உள்ளீடுகள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் தனிப்பட்ட கோப்புகளை பைட்கள் ஸ்கேன் செய்யும்.
ஸ்கேன் முடிந்ததும் ஸ்கேன் முடிவுகளை மதிப்பாய்வு செய்து, அச்சுறுத்தும் மால்வேர்களை அடையாளம் காட்டும்.
அந்த மால்வேர்கள் மற்றும் அது இருக்கும் கோப்புகளை வெளியே நகர்த்தவும்.
கணினியிலிருந்து மால்வேர்களை அகற்றி சுத்தம் செய்யவும்.
சுத்தம் செய்வதை முடிக்க தேவைப்பட்டால் ரீபூட் செய்யவும். (கணினியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்).
பிறகு, மீண்டும் கணினியை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது சரிபார்ப்பதன் மூலம் கணினி மேலும் ஏதேனும் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆராயவும்.
முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டியவை
மால்வேர்பைட்ஸ்
சூப்பர்ஆன்டிஸ்பைவேர்
மால்வேர் அகற்றும் கருவி
ஆட்வேர் இலவச ஆன்டிவைரஸ்
அவாஸ்ட் இலவச மேக் பாதுகாப்பு