'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப...
NCRB: `வேலையில்லா திண்டாட்டம் உயிரிழப்பு; போக்சோ வழக்கு' - கவலையளிக்கும் 2023 அறிக்கை
தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கை
'வேலையில்லாத காரணத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 14, 234 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 15.4 சதவிகிதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்' என்று 'தேசிய குற்ற ஆவண காப்பகம்' வெளியிட்டுள்ள பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் (NCRB) நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
குற்றங்கள் 7.2 சதவிகிதம் அதிகம்
அதில், நாடு முழுவதும் 2023 ஆம் ஆண்டில் 62,41,569 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 37,63,102 குற்றங்களும், சிறப்புச் சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் 24,78,467 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த 2022-ல் 58,24,946 குற்றங்கள் பதிவான நிலையில் 2023-ல் 7.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2022-ல் பெண்களுக்கு எதிராக 4.45 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2023-ல் 4.48 லட்சம் வழக்குகளாக அதிகரித்துள்ளது, குழந்தைகளுக்கு எதிராக 9.2 சதவிகித குற்றங்கள் அதிகரித்துள்ளது. மொத்தம் 1,77,335 வழக்குகளில் 66,232 போக்சோ வழக்குகள் ஆகும்.

கொலை வழக்குகள்
2022-ல் நாட்டில் 28,522 கொலை வழக்குகள் பதிவான நிலையில் 2023-ல் 2.8 சதவிகிதம் குறைந்து 27,721 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சைபர் குற்றங்கள்
2022-ல் 65,893 சைபர் குற்றங்கள் பதிவான நிலையில், 2023-ல் 31.2 சதவிகிதம் உயர்ந்து 86,420 ஆக பதிவாகியுள்ளது.
பழங்குடியினருக்கு எதிராக 2022-ல் 10,064 குற்றங்கள் பதிவான நிலையில் 2023-ல் 28.8 சதவிகிதம் அதிகரித்து 12,960 வழக்குகள் பதிவாகியுள்ளன.
விவசாயிகள்
2023 ஆம் ஆண்டில் நம் நாட்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் 10,786 விவசாயிகள் ஆவார்கள்.
இவர்களில் 38.5 சதவிகிதம் பேர் மகாராஷ்டிராவையும் 5.9 சதவிகிதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகும்.
வேலையில்லாத காரணத்தால் நாடு முழுவதும் 14,234 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இதில் கேரளாவில் 15.4 சதவிகிதம் பேரும், மஹாராஷ்டிராவில் 14.5 சதவிகிதம் பேரும் தமிழகத்தில் 11.2 சதவிகிதம் பேரும் உ.பி-யில் 9.1 சதவிகிதம் பேரும் அடங்குவார்கள்.
முதியவர்கள்
2022-ல் முதியவர்களுக்கு எதிராக 28, 545 குற்றங்கள் பதிவான நிலையில் 2023-ல் 27,886 ஆக குறைந்துள்ளது.
இதில் தமிழகத்தில் 2,104 வழக்குகள் பதிவாகியுள்ளது. என்பது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.