செய்திகள் :

``இஸ்ரேலின் சியோனிஸ்டுகளும் இந்தியாவின் RSS-ம் இரட்டை சகோதரர்கள்'' - கேரள முதல்வர் பினராயி விஜயன்

post image

இந்தியாவின் பதிவு செய்யப்படாத அமைப்புகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு ஹெட்கேவர் என்பவரால் இந்துராஷ்டிரக் கனவுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நூற்றாண்டு நிறைவடைகிறது.

அதற்கான நூற்றாண்டு விழா டெல்லியின் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ``ஆர்.எஸ்.எஸ் தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார்.

மோடி
மோடி

அவருடன் சேர்ந்து, அமைப்பின் பல உறுப்பினர்களும் சிறைக்குச் சென்றனர். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஹைதராபாத் நிஜாம்களின் கைகளில் ஆர்.எஸ்.எஸ் துன்புறுத்தப்பட்டது." எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "இஸ்ரேலில் உள்ள சியோனிஸ்டுகளும் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-ம் இரட்டை சகோதரர்கள்."

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த H-1 B விசா கட்டண உயர்வு, இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பணிவான ஊழியர் என்பதைக் காட்டுகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் இந்திய குடிமக்களை கைவிலங்கு பூட்டி கொண்டு வந்தபோதும், விசா கட்டணங்களை அதிகரித்தபோதும் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்த நாடு சுயமரியாதை மிக்க ஒருவரின் ஆட்சியில் இருக்கும் தேசமாக இருந்தால் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். ஆனால் பணிவான ஊழியர்களாக மாறும் ஆட்சியாளர்களைதான் நாம் பார்க்கிறோம்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

ட்ரம்ப் இந்தியப் பொருட்களின் மீது வரிகளை உயர்த்தியபோதும் மோடி எதுவும் பேசவில்லை. ஆர்எஸ்எஸ் நாட்டிற்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறோம் என்ற பெயரில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருக்கிறார்.

இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். நமது அரசியலமைப்பிற்கு பெரும் அவமானம். சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி, காலனித்துவ உத்தியுடன் இணைந்த, பிரிவினைவாத சித்தாந்தத்தை ஊக்குவித்த ஒரு அமைப்பை இது சட்டப்பூர்வமாக்குகிறது.

நமது உண்மையான சுதந்திரப் போராளிகள் கற்பனை செய்த மதச்சார்பற்ற, ஒன்றுபட்ட இந்தியாவின் நினைவின் மீதான நேரடித் தாக்குதலாகும்" என்றார்.

ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க

"நாயக வழிபாடு, கும்பல் மனநிலை; எப்போது முழுமையான தலைவராவார் விஜய்?" - உளவியல் ஆலோசகர் சிந்து பேட்டி

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணம், 41 மரணங்களுடன் சோகமான நிகழ்வாக முடிவடைந்திருக்கிறது. இந்த அசம்பாவிதத்திற்கு தவெக-வின் முறைப்படுத்தப்படாத செயல்பாடுகளும் விஜய்யின் கால தாமதமு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதலுக்கு யார் காரணம்? - விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஜெப ஆலயத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்:நேற்று (2-ம் தேதி) 09:30 மணிக்குப... மேலும் பார்க்க

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு செல்லாத நீங்கள்...' - ஸ்டாலினை விமர்சிக்கும் அண்ணாமலை

கரூரில் நடந்த சம்பவத்தை விசாரிக்க எம்.பி குழுவை அமைக்கப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை... மேலும் பார்க்க