செய்திகள் :

கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்

post image

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி எம்.பி நியமிக்கப்பட்டார்.

இந்தக் குழுவில் அமைச்சர் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் ஆகியோர் இடம்பெற்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி குழு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி குழு

இந்த ஆய்வுக்குழுவின் விசாரணைக்குப் பிறகு, அமைச்சர் அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ``கரூரில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சோகத்துக்கான முதன்மை காரணங்கள் என்ன?

உள்ளூர் அதிகாரிகளால் செய்யப்பட்ட முதற்கட்ட ஏற்பாடுகள், இதுவரை அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றின் பகுப்பாய்வு அறிக்கை வெளியிட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் இந்தச் சூழ்நிலைக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதற்கான அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

  • கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?

  • நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
  • ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் சோகத்திற்குப் பங்களித்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?

  • எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளைத் தயவுசெய்து பரிந்துரைத்துப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான ... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதலுக்கு யார் காரணம்? - விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஜெப ஆலயத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்:நேற்று (2-ம் தேதி) 09:30 மணிக்குப... மேலும் பார்க்க

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு செல்லாத நீங்கள்...' - ஸ்டாலினை விமர்சிக்கும் அண்ணாமலை

கரூரில் நடந்த சம்பவத்தை விசாரிக்க எம்.பி குழுவை அமைக்கப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தள்ளு, தள்ளு" - வெள்ள பாதிப்பைப் பார்க்கப் போன MP; படகில் வைத்து தள்ளிச் சென்ற மக்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக சோலாப்பூர், அகில்யா நகர் மற்றும் மராத்வாடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.நெற்பயிர்கள், பழப்பயிர்கள் என விவசாயிகளின் ஒ... மேலும் பார்க்க

``எனது அமைதி வெற்றிக்கான அறிகுறி" - சொல்கிறார் செங்கோட்டையன்

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்க... மேலும் பார்க்க

கரூர் சோகம்:``தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்" - மத்திய அரசை சாடும் முதல்வர் ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர... மேலும் பார்க்க