செய்திகள் :

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை!

post image

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோயில் வளாகத்தில் ஒற்றைக் காட்டு யானை திடீரென நுழைந்ததால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு இருந்து 7-ஆவது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மலைப் பாதை மூடப்பட்டு அங்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த பகுதியில் பூஜை சாமான் கடைகள், அன்னதான கூடம், கோயிலின் உணவு கூடமும் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து வந்த ஒற்றைக் காட்டு யானை அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு வைத்திருந்த உணவுப் பொருள்களை தின்றுவிட்டு சேதப்படுத்தி சென்றது. இதனை கட்டுப்படுத்த வனத் துறையினர் கும்கி யானை வர வழைத்து அங்கு முகாமிட்டு கண்காணித்து வந்தனர். அதனால் அந்த காட்டு யானை கடந்த சில மாதங்களாக அந்த பகுதிக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில். ஆயுத பூஜை, விஜயதசமி விழாவையொட்டி பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னிதியில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றிருந்த நிலையில், வியாக்கிழமை எதிர்பாரத நிலையில் மீண்டும் உணவைத்தேடி கோயில் வளாகத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை நுழைந்தது. இதனை பார்த்த பக்தர்கள் ஓடுங்க, ஓடுங்க திரும்பி பார்க்காதீங்க ஓடுங்க... என்று கூச்சலிட்டவாறு ஓட்டம் பிடித்தனர்.

அதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் செல்போனில் விடியோ பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் கோயில் யானை உள்ளது போன்று நிரந்தரமாக அந்த பகுதியில் வனத்துறையினர் முகாம் அமைத்து கும்கி யானையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் கோரிக்கை மற்ரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

A lone wild elephant terrified devotees at the Velliangiri temple in Poondi

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கரூா் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பாஜக கவுன்சிலர் முறையீடு!

கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செ... மேலும் பார்க்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு இன்று விசாரணை!

கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு தொடர்பான பொதுநல வழக்கு, சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை(அக்.3) விசாரிக்கப்பட உள்ளது.கரூா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் வசித்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மற்றும் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக குறுஞ்செய்தி விடுக்கப்பட்டுள்ளது பரபரப... மேலும் பார்க்க

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திரா... மேலும் பார்க்க