ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
ராமநாதபுரத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
”1. ராமநாதபுரம் நகராட்சியில் இருக்கும் நான்கு வழித்தட தேசிய நெடுஞ்சாலை ரூ. 30 கோடியில் 6 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும்
2. திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம் பகுதிகளில் உள்ள 16 முக்கிய கண்மாய்கள், ரூ. 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
3. கீழக்கரை வட்டத்தில் உள்ள 6 கண்மாய்கள் ரூ. 4.65 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்
4. கடலாடி வட்டத்தில் உள்ள செல்வணூர் கண்மாய் ரூ. 2.60 கோடியிலும், சிக்கல் கண்மாய் ரூ. 2.30 கோடியிலும் மறுசீரமைக்கப்படும்
5. பரமக்குடி நகராட்சிக்கு ரூ. 4.60 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டடம் கட்டப்படும்
6. ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள பழைய பேருந்து நிலையம், நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும்
7. ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். ரூ. 10 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்
8. கீழக்கரை நகராட்சிக்கு ரூ. 3 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும், ரூ. 1.5 கோடி செலவில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்
9. கமுதி விவசாயிகள் நலன்கருதி ரூ. 1 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்
இந்த 9 அறிவிப்புகளும் வருகின்ற ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.